Saturday, April 25, 2009

வாழ்க்கையை தொலைநோக்குடன் எதிர் கொள்ளுதல்

பலர் ஒரு சிறிய விஷயத்திற்காக கூட அவர்களின் தன்னம்பிகையை இழந்து விடுகின்றனர்.வாழ்க்கை என்பது ஏற்ற இறக்கங்கள் நிறைந்தவை தான்.இன்றைய தலைமுறை இளைஞர்கள் இதை ஏற்க மாறுகின்றனர்.வாழ்க்கையில் ஒரு சிறு தோல்வியில் குட துவண்டு விடுகின்றனர்.வாழ்கையை வாழ்ந்து தான் பார்போமே.நம் வாழ்க்கை தானே.

பள்ளி வாழ்க்கை:
சில எடுத்துக்காட்டுகளை நாம் பார்போம்.பள்ளி மாணவர்களிடமிருந்து ஆரம்பிப்போம்.சிறு வயதில் ஒரு மாணவனுக்கு ஏதும் தெரிவதில்லை.அவன் என்று ஒன்பதாம் வகுப்பு அடி எடுத்து வைகின்றனோ அன்றிலிருந்து வாழ்கை அவன் தன்னம்பிக்கையை சோதிக்க ஆரம்பித்து விடுகிறது.அவனது மதிபெண்கள் தான் அவனுடைய முதல் எதிரியாக விலங்குகின்றது.எவன் அதை ஒரு தொலை நோக்குடன் எடுத்துக்கொண்டு அதன் வழி செல்கின்றனோ அவன் நல்ல மதிபெண்கள் பெற்று வகுப்பிலும் நற்பெயர் எடுக்கிறான்.அதையே ஒரு சுமையாக நினைத்து அவர்கள் பெற்றோரை மற்றும் ஆசிரியர்களை ஏமாற்றுவதை நினைத்து சிலர் அவர்களையே ஏமாற்றி கொள்கின்றனர்.இதனால் அவன் வாழ்கை பாதை திசை மாறி சென்று விடுகின்றது. பெற்றோர்களும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.ஒரு சிறுவனின் பாதையை நிர்ணயிக்கும் பெரும் பொறுப்பை அவர்கள் ஏற்கின்றனர்.பெற்றோர்கள் அதை செரியாக செய்யும் பொருட்டு அவர்களின் குழந்தை செரியான பாதைக்கு வழி நடத்த படுகிறது.

வாழ்க்கை பாடம் கற்பிக்கும் இடம்:
பள்ளி வாழ்கை ஒரு வழியாக முடிந்தாகி விட்டது.மதிபென்களும் எடுத்தாகிவிட்டது.அடுத்து அவன் கல்லூரியில் காலடி எடுத்து வைக்க வேண்டிய தருணம்.அவன் இந்த உலகை ஒரு கூண்டிலிருந்து விடுபட்டு சென்று எதிர்கொள்ள போகின்றான்.அவனது தன்னம்பிக்கையை பெரிதும் சோதிக்க போகும் காலமாக கல்லூரி வாழ்க்கை ஒவொரு மனிதனுக்கும் அமையும்.அவன் பலவற்றை எதிர்கொள்ளும் தருணம் இது.ஒரு மாணவன் அல்லது மாணவி பெரிதும் அவர்களது தன்னம்பிக்கை மற்றும் மன பலத்தை இலகும் ஒரே இடம் காதல் வயபடுதலில் தான்.அந்த ஒரு சொல் அவர்களின் குனதயே மாற்றிவிடும் தன்மை கொண்டது.காதல் தப்பென்று எவரும் சொல்லவில்லை ஆனால் அதை வெற்றி பெற செய்ய அவர்கள் எதிர்காலம் மிகவும் முக்கியம்.சில வெற்றி பெறவில்லை என்றாலும் அவர்கள் வாழ்க்கையை அளித்து கொள்வதில் யார்ருக்கும் அவ்வித லாபமும் இல்லை.சிலர் அவர்கள் உயிரையே மாய்த்துக் கொள்ளும் முடிவிற்கு வந்து விடுகின்றனர்.அதனால் யாருக்கு லாபம்?இதில் பயன் என்ன உள்ளது?சில நாள் தன்னுடன் வாழ்ந்த காதலி/காதலன் முக்கியமாகி விட்டார்கள் அவர்கல் பத்து திங்கள் பெற்று வளர்த்த பெற்றோர்களை விட. இது எப்பிடி சாத்தியமாகும்?அவர்களுக்கு மட்டுமே புலப்படும் விடையாகவே இது விளங்குகின்றது.எந்த முடிவும் எடுப்பதற்கு முன்பு சற்று யோசிக்க கூடாதா.

இவர்கள் ஒரு வகை என்றால் இன்னொரு புறம் காதலி மீது திரவம் ஊற்றுவது,அவளை காய ப்படுத்துவது மாற்ற குற்றங்களை யோசிக்காமல் செய்து விடுகின்றனர்.அது அவர்கள் வாழ்க்கையையும் பாதித்து அந்த பெண்ணின் வாழ்க்கையும் பாதிக்க படுகிறது.இவர்கள் சில நிமிடம் உட்கார்ந்து ஒன்றுக்கு ஐந்து முறை அவர்கள் முடிவு சரி தானா என்று யோசித்தாலே போதுமானது அவர்கள் தீர்க்கமான ஒரு முடிவவை அதுவும் ஒழுங்கான முடிவை எடுக்க.இது அவர்கள் வாழ்கையை பாதிக்கும் அன்று தெரிந்த அடுத்த நிமிடம் அவர்கள் அந்த முடிவிலிருந்து மாறி விடுவார்கள்.

இன்னொரு புறம் சிலர் அவர்களது துகையை பயமுறுத்துவதை செய்வார்கள்.நான் தற்கொலை செய்து கொள்வேன் என்றும்,அவர்களையே காயப்படுத்தி கொண்டு,படிப்பில் கவனம் செலுத்தாமல் பரிதாபத்தை எதிர்பார்பார்கள்.இவர்களும் அவர்களது வாழ்கையை தேவையில்லாமல் காய படுத்தி கொண்டு தான் உள்ளனர்.

காதல் என்பது நம் உடலில் ஏற்படும் ஒரு மற்றம் மட்டும் தான்.காதலில் உண்மையாக இருபது தவறில்லை ஆனால் காதல் மட்டுமே வாழ்க்கை இல்ல்லை என்பதை எல்லோரும் தெளிவாக புரிந்து கொண்டால் போதும் பல பிரச்சனைகளை நம் வாழ்கையில் கடந்து விடலாம்.காதலுக்காக பெற்றோரை விட்டு கொடுத்து அவர்களை கஷ்டப்படுத்தி ஒன்று சேர்வது என்பது நம் உயிரையே நாம் கஷ்டப்படுத்துவது போன்றாகும்.தயவு செய்து அந்த எண்ணங்களை மட்டும் விட்டு விடுங்கள்.

கல்லூரியில் காதல் ஒரு புறமிருக்க முடித்தும் அல்லது கல்லோரியிலயே நடத்தப்படும் நேர்கனளிலயே வேலை வாங்கி விட வேண்டும் என்பது பலரது கனவு.கனவு மட்டுமல்ல அவர்களது லட்சியமாக இருக்கிறது.அதில் தோல்வியுற்றால் அவர்களது வாழ்கையே பறிபோனதாக எண்ணி விடுகின்றனர்.படிப்பிற்கு ஏற்ற வேலை தான் என்றில்லாமல் சுய கவுரவத்துடன் செய்யும் எந்த வேலையும் நல்லது தான் என்பதை பலரும் ஏற்று கொள்வது இல்லை.கடுமையாக உழைத்து நமக்கான வேலையயை நம்மால் கண்டிப்பாக பெற முடியும்.இந்த தெளிவும் தன்னம்பிக்கையும் குடவே கொஞ்சம் உலையும் இருந்தால் பூத்தும் நாம் நம் இலக்கை கண்டிப்பாக அடைந்து விடுவோம்.

சுமையை தூக்கி கொண்டு புறப்படும் சந்திப்பு:

திருமணம் என்பது தான் நாம் உண்மையான வாழ்கையை எதிர்கொள்ள நாம் காலடி எடுத்து வைக்கும் தருணம்.அதுவரை நம்மை பேணி பாதுகாக்க நம் பெற்றோர்கள் இருந்தனர்.திருமணத்திற்கு பிறகு நாமே நம் சுமைகளை தூக்கி சுமக்கும் பொறுப்பை ஏற்று கொள்கின்றோம்.

இந்த தலைமுறையில் பலர் ஏதும் ஒரு சிறிய விஷயத்தை பெரிதாக்கி கடைசியில் நீதிமன்றத்தை நாடும் ஒரு தீர்வையே விரும்புகின்றனர்.விட்டு குடுக்கும் மனப்பான்மை யாரிடமும் இல்லை.நம் சுய விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு நம் துணையுடன் நாம் விட்டு கொடுத்து போனால் வரும் சந்தோஷமும் நிமதியும் நீதிமன்ற வாசலில் எதிர்பார்ப்பது மிக பெரிய முட்டாள்தனம்.அதை இனியேனும் தவிர்த்து நம் வாழ்கையை இனிதக்குவது நம் கையில் தான் உள்ளது.

நம் வாழ்க்கை நம் கையில் தானே தவிர மற்றவர்களிடத்தில் எதிர்பார்ப்பது மிக பெரிய முட்டாள்தனம்.ஆதலால் நாம் நம் வாழ்கையை இனிதாக அமைப்போம்.நம் பெற்றோர்களுக்கும் சமுதாயத்துக்கும் நற்பெயரை உருவாக்கி கொடுப்போம்.